பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 குழந்தைகள் உட்பட 30 பேர் உடல் கருகி இறந்தனர்.

லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் மசூதியுடன் இணைந்த கட்டிடத்தில் இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்குப் பல மாணவர்கள் தங்கி, படித்து வந்தனர்.

school Fire accident

இந்நிலையில், இரவு நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 28 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 30 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

school Fire accident

மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிர் இழந்த குழந்தைகளில் பலர் 10 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் தெரியவந்தது.

school Fire accident

இதனிடையே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வீ, நேரில் வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.