தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார். 

KPY Dheena Clarifies About Twitter Fake Profile

தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார். மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தீனா பேசியது அரங்கத்தை நகைச்சுவை மழையில் நனையச்செய்தது. 

KPY Dheena Clarifies About Twitter Fake Profile

இந்நிலையில் தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலியான ட்விட்டர் அக்கௌன்ட் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் இந்த ஃபேக் அக்கௌன்ட்டை ரிப்போர்ட் செய்யுங்கள். எனக்கே தெரியாத அப்டேட்டுகள் எல்லாம் இதில் உள்ளது. இப்படி போலியான ட்விட்டர் அக்கௌன்ட்டால் என்ன பயன் என்று தெரியவில்லை. நான் உபயோகிக்கும் அக்கௌன்ட்டிலேயே 9000 தான் பின்தொடர்கின்றனர். ஆனால் போலி அக்கௌன்ட்டுக்கு 17000 பேரா ? என்று பதிவு செய்துள்ளார்.