இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். 

Karthik Subbaraj Chiyaan 60 Title Clarification

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். 

Karthik Subbaraj Chiyaan 60 Title Clarification

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் சியான் 60 படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்து நெருங்கிய திரை வட்டாரங்களில் விசாரித்த போது, அதுபோன்ற செய்தி ஏதும் இல்லை என்று தெளிவு செய்தனர். ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறது.