விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர்.இந்த தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் காவியா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

வெகு விரைவில் சீரியல் கனவுக்கன்னியாக காவியா உருவெடுத்தார்.அடுத்ததாக விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார் காவியா.மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்து செம ஹிட்டான இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Axess Film Factory தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளார்,இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா அறிவுமணி நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதனை தொடர்ந்து கவின் நடிப்பில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஊர்குருவி படத்தில் இவர் ஹீரோயினாக நடிப்பதாகவும் இதனால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவி வந்தன,ஆனால் இவர் சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்த தகவல் வெறும் வதந்தி தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.