தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ந்தி நடிக்கிறார். 

Jail Movie First Single Kaathodu Song Update

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா, படத்தொகுப்பு அருவி படத்தில் கலக்கிய ரேமண்ட் என தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் நடந்து முடிந்தது. தற்போது இப்படம் குறித்த ருசிகர தகவலை ஜிவி பிரகாஷ் பகிர்ந்துள்ளார். 

Jail Movie First Single Kaathodu Song Update

ஜெயில் படத்தின் சிங்கிள் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய காத்தோடு பாடல் வெளியாகவுள்ளது. கபிலன் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், பேட்சுலர், காதலிக்க யாருமில்லை, ட்ராப் சிட்டி போன்ற படங்கள் உள்ளது.