கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நஸ்ரியா. ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். தனது க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார். நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பின் நடிக்காமல் இருந்தவர் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு கூடே, டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்தார். 

Nazriya Nazim Shares Her Childhood Photo

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்து வருகின்றனர். 

Nazriya Nazim Shares Her Childhood Photo

இந்நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் சிறுவயதில் மட்டுமல்லாமல், இப்போதும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவு அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் தமிழ் சினிமாவிலும் ரீஎன்ட்ரி தாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😀Always.....

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh) on