தமிழ் சினிமாவில் நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய  நடிகர் கவின். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தமிழ் மக்கள்  மனதில் இடம் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவினுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததையடுத்து லிஃப்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். .

லிஃப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் உடன் இணைந்து நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்க ஒளிப்பதிவாளர் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிஃப்ட் திரைப்படத்தை ஈகா என்டர்டைன்மென்ட் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ்  இணைந்து தயாரித்துள்ளது. 

வெகுநாட்களாக இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி தற்போது தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர் மனம் திறந்துள்ளார். இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் மிகவும் அமைதியாக இருப்பதாகவும், திரையரங்குகள் திறக்க தாமதமானால் இப்போது வெளியாகும் பாடலும் டிரெய்லரும் பழையதாகி விடும் என்ற காரணத்தினாலும்  இன்னும் எதையும் வெளியிடாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "மிரட்டலான ட்ரைலர் தயாராக இருக்கிறது. ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. எனவே எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தாமதத்திற்கு ஏமாற்றங்களுக்கும் மன்னிக்கவும்..."  என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக லிஃப்ட் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என வதந்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்த குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதிக்கு பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக நடிகர் கவின் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.