பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் அசுரன். நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் திரைப்படத்தை கலைபுலி.எஸ்.தாணு அவர்கள் தனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

நடிகர் தனுஷ், நடிகை மஞ்சுவாரியார், பசுபதி, கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த அசுரன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தமிழில் மெகா ஹிட்டான அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது.

நாரப்பா என்னும் பெயரில் தெலுங்கில் ரீமேக்கான அசுரன் படத்தில் கதாநாயகனாக முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்க தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்திருந்தார். பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கியிருக்கும் நாரப்பா படத்திற்கு இசையமைப்பாளர் மணிஷர்மா இசையமைத்திருக்கிறார். 

கலைபுலி.எஸ்.தாணு மற்றும் டி சுரேஷ்பாபு இணைந்து தயாரித்திருக்கும் நாரப்பா திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வருகிற ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான நாரப்பா டிரைலர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதனை தொடர்ந்து தற்போது நாரப்பா  படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் இந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.