கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனம் சார்பில் சத்யமூர்த்தி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், விஜய் குமார், ஹரிஜா, முனிஷ் காந்த, யாஷிகா ஆனந்த் மற்றும் ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Magave Song Lyric Video

நகைச்சுவை த்ரில்லர் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு கெளஷிக் க்ரிஷ் இசையமைக்கிறார். ஜோஷுவா ஜெ பெரேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். லாக்டவுன் முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். 

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Magave Song Lyric Video

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலான மகவே பாடல் லிரிக் வீடியோவை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார். சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் வரிகளை ரமேஷ் வெங்கட் எழுதியுள்ளார். பாடலில் அமைந்துள்ள 3டி காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.