பக்ரீத் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ
By Sakthi Priyan | Galatta | August 29, 2019 14:00 PM IST

இயக்குநர் ஜக்தீச சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பக்ரீத். இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வசுந்த்ரா காஷ்யப் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்கிறார்.
திலிப் சுப்பராயன் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒட்டகத்தை அதனுடைய இடத்தை விட்டு வேறு இடத்தில் வளர்க்க ஆசைப்படும் ஹீரோவின் கதை தான் இந்த பக்ரீத்.
தற்போது படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்து விட்டு நடிகர் பொன்வண்ணன் பாராட்டி கூறியுள்ளார்.