தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர்.

அசுரன் திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதியன்று வெளியாகும் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், அசுரன் படத்தின் ரெகார்டிங் மற்றும் பிற ஆடியோ பணிகள் முடிந்துவிட்டதாகவும். பாடல்கள் வெளிவரும் தேதியை விரைவில் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கும் என்று பதிவு செய்துள்ளார்.