இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது.

Arun Vijay About The Progress Of His Next Film Boxer

தற்போது இப்படம் குறித்த ருசிகர செய்தியுடன் விரைந்துள்ளார் அருண் விஜய். அவர் வெளியிட்ட பதிவில், உங்களில் பலர் பாக்ஸர் படத்தின் தற்போதைய நிலை என்னவென்று கேட்டீர்கள். உங்களை போல் நானும் உற்சாகமாக இதை பதிவிடுகிறேன். இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். முழுமையாக இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் முயற்சியும், முழு அர்ப்பணிப்பும் தேவை இந்த படத்திற்கு. சரியான கால கட்டத்தில் இந்த ப்ராஜெக்ட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும். இதை தயாரிப்பு நிறுவனவே உறுதி செய்ய வேண்டும். அதுவரை என் ரசிகர்கள் காத்திருங்கள் என்று பதிவு செய்துள்ளார். 

Arun Vijay About The Progress Of His Next Film Boxer

மேலும் படத்திலிருக்கும் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார் அருண் விஜய். இந்த புகைப்படம் இணையத்தை ஈர்த்து வருகிறது. தற்போது அருண் விஜய் கைவசம் சினம், அக்னிச் சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது.