தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது தேஜாவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார்.இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணைந்து தயாரிப்பதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த் பணியாற்றி வருகிறார்.

அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இதனையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் படத்தின் வேலைகள் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.