அஜித் பட இயக்குனருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி ! விவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | August 03, 2019 18:06 PM IST

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதனை தொடர்ந்து தல 60 படத்தையும் இயக்கவிருக்கிறார் வினோத். இதன் பின் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படத்தின் கதை, வசனத்தை எழுதவுள்ளாராம். வினோத்தின் அசோசியேட் இயக்கவிருக்கிறார்.
சிறந்த இசையமைப்பாளரான ஆதி, மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார் என்பது கூடுதல் தகவல்.