சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் திரைதுறைக்கு அறிமுகமானவர் இயக்குனர் H வினோத். போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய நேர்கொண்ட பார்வை படம் குறித்தும் தல அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்துகொண்டார். 

அஜித் நடிக்கும் தல 60 படத்தின் இயக்குனரும் அவர் தான் என்பதால், ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் வினோத் தளபதி விஜய்க்கு கதை சொன்னார் என்றும், விரைவில் இருவரும் சேர்ந்து படம் செய்ய உள்ளனர் என்றெல்லாம் செய்தி வெளியானது. அப்போது வெறும் வதந்தி என பலர் தவிர்த்தனர்.

தற்போது கலாட்டா சிறப்பு குழு இதுகுறித்து கேட்கையில், தளபதி விஜய்க்கு கதை சொன்னது உண்மைதான். கதை பிடித்து அவர் சரி என்று கூறினால், விரைவில் அதற்கான வேலைகள் நடக்கும் என்று பதிலளித்துள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கமெர்ஷியல் கதையை கூறியதாக தெரியவந்தது. இதயத்து அதிபதியான தளபதியை வேறொரு பரிமானத்தில் பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியாக அமைந்தது இச்செய்தி.