கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார்.இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

தனது முதல் தயாரிப்பிலேயே ரசிகர்களை எண்டெர்டைன் செய்து ஒரு கருத்தையும் தெரிவிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதில் வெற்றியும் கண்டார் சிவகார்த்திகேயன்.அதே போல் இந்த படமும் அவருக்கு வெற்றியை தருமா என்பதை பார்க்கலாம்

Youtube பிரபலங்களான ரியோவும்,RJ விக்னேஷ்காந்தும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று Prank ஷோக்களை செய்து வருகின்றனர்.இவர்கள் வாழ்க்கையில் இடையில் வரும் கோடீஸ்வரர் ராதாரவி தான் சொல்லும் வேலைகளை முடித்தால் பெரிய தொகையை தருவதாக வாக்குத்தருகிறார்.ராதாரவிக்கு வேலை பார்க்கும் ரியோ,விக்னேஷ்காந்த் இருவரையும் ஒரு கொலையை தடுக்கும்படி கேட்கிறார் அதனை கதாநாயகன் மறுக்க பின்னர் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

இந்த கதையில் காதல்,காமெடி,செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.அறிமுக நாயகன் ரியோ கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார் காதல்,காமெடி,செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் அடித்து நொறுக்கி இருக்கிறார்.அவருக்கு பக்கபலமாக வரும் RJ விக்னேஷ்காந்த் அவ்வப்போது தனது oneliner-களில் நம்மை சிரிக்க வைக்கிறார் மத்தபடி படத்தில் காமெடி படத்தில் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.எந்த கேரக்டர் கொடுத்தாலும் assaultஆக தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார் ராதாரவி ஆனால் இன்னும் நடிகர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும் ஒரு அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயின் கேரக்டரில் அறிமுகமாகியுள்ளார் Shirin Kanchwala.விவேக் பிரசன்னா திரையில் கம்மியான நேரமே வந்தாலும் தனது நடிப்பின் மூலம் நம்மை கவருகிறார்.சுட்டி அரவிந்த்,அயாஸ் இருவரும் தங்களது பணியை மிக சிறப்பாக செய்துள்ளனர்.இந்த கேரக்டர்களை தவிர வேறு கேரக்டர்கள் மனதில் நிற்கவில்லை.

படத்தில் புதுமாதிரியான ஒரு படத்தை எதிர்பார்த்து போனால் Youtube-ல் தான் சொன்ன கருத்தையே கொஞ்சம் மசாலா தூவி சொல்லியுள்ளார் கார்த்திக் வேணுகோபால்.தனது ஒட்டுமொத்த Blacksheep டீமையும் இந்த படத்தில் நடிக்கவைத்துவிட்ட்டார் ஆனால் அவ்வப்போது கேரக்டர்கள் வருவதும் போவதும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது.திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல படமாக அமைந்திருக்கும்.Situation-க்கு ஏற்ற மாதிரி RJ விக்னேஷ் அணிந்து வரும் tshrit செம.இளைஞர்களிடம் இருந்து புதிதாக ஒரு படத்தை நாம் எதிர்பார்த்தோம் ஆனால் நமக்கு தெரிந்த விஷயங்களையே படத்தில் கூறியுள்ளனர்.சற்று வித்தியாசமாக தெரிவித்தது படத்திற்கு பிளஸ்.Flashback காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும் எதார்த்தமாக இல்லை.

கமர்ஷியல் படத்திற்கு தேவையான தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார்.படத்தின் மற்றுமொரு பிளஸ் படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 8 நிமிடம் என Crisp ஆக இருக்கிறது.ஷபீர் இசையில் பாடல்கள் சுமார் தான்.கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடல் தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.பாடல்களின் Placement சரியாக அமையவில்லை.Background ஸ்கோரில் ஸ்கோர் செய்துவிட்டார் ஷபீர்.குறிப்பாக சுட்டி அரவிந்துக்கு வரும் செண்டிமெண்ட் மியூசிக் மற்றும் கிளைமாக்ஸ் பாடல் என்று தனது முத்திரையை பதித்துள்ளார்.முதல் படம் என்பது புதுமுக நடிகர்களுக்கு நல்ல படம் என்பதை தாண்டி நல்ல பாடமாக அமையும்.

மொத்தத்தில் நாம் அனைவரும் ரசிக்கும்படி நமக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளை கோர்த்து ஒரு கதை அமைத்துள்ளனர்.இந்த படம் Blacksheep குழுவினருக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் ஒரு வெற்றி படமாக அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்