வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகி இருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் வெளியான வேட்பாளர் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது சர்ச்சையாக மாறியுள்ளது.