பெற்றோர் உடன் வசித்து வந்த பெண்ணை இரவு நேரத்தில் பார்க்க வந்த மைத்துனர், அதிகாலை நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் சிவான் மாவட்டத்தில் உள்ள பர்ஹாரியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு, தனது கணவருடன் அந்த பெண் வசித்து வந்தார். அப்போது, கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்ததால், தனது கணவருடன் சண்டை போட்டுவிட்டு, அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.

இப்படியாக, கணவனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு வந்த அந்த பெண், தனது பெற்றோருடன் கடந்த ஒரு வருடமாக இங்கேயே தங்கி விட்டார். அதன் பிறகு, தனது கணவன் வீட்டிற்கு அந்த பெண் செல்ல வில்லை என்று கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அந்த பெண்ணை பார்ப்பதற்காக, அந்த பெண்ணின் மைத்துனர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வந்திருக்கிறார்.

சிறிது நேரம் அந்த பெண்ணிடம் தன் குடும்ப விசயம் பற்றிய பேசிய அந்த மைத்துனர், அதன் பிறகு அங்கேயே சாப்பிட்டுவிட்டு, இரவில் கடைசி பேருந்தும் சென்று விட்டதால், அங்கேயே தங்கி விட்டார்.

இப்படியான நிலையில், அன்றைய தினம் நன்றாகத் தூங்கி எழுந்த அந்த பெண் விடியலுக்கு முன்பாக, அதிகாலை நேரத்தில் எழுந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் மைத்துனர், அந்த பெண்ணை ஒரு சைக்கிளில் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில், அந்த அதிகாலை நேரத்தில் அந்த  பெண்ணை அந்த கையில் டார்ச் லைட் கூட இல்லாமல் வயல்வெளி பக்கமாக நடந்து சென்றுகொண்டு இருந்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, பின் தொடர்ந்து வந்த அவரது மைத்துனர், அந்த பெண்ணை அந்த வயல்வெளியில் வைத்து பலவந்தமாகப் பலாத்காரம் செய்து உள்ளார். இதனையடுத்து, தனது பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை அவர் கழுத்திலேயே பலமாகப் பலமுறை குத்தி உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண், மூச்சு விட முடியாமல் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளார்.

காலையில் நன்றாக விடிந்த பிறகு, அந்த பெண் இறந்த செய்தி, அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “நேற்று இரவு நேரத்தில் மைத்துனர் வந்து தங்கியதும், காலையில் விடிந்ததும், அவரை காணவில்லை என்றும், அதனால் அவர் தான் கொலை செய்திருக்கக் கூடும்” என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண்ணின் மைத்துனரை அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.