பர்த் டே பார்ட்டிக்கு டேட்டிங் APP காதலனுடன் சென்ற காதலிக்கு மது கொடுத்து மயங்க வைத்த காதலன், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இப்படி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருக்கிறது.

மும்பை வோர்லி பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர், தனது பெற்றொருடன் வசித்து வருகிறார். இந்த பெண், எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியே இருந்துள்ளார்.

அத்துடன், தற்போது கொரோனா காலம் என்பதால், மும்மை மாநகரமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், அங்கு முழு ஊரடங்கு உத்தரவு கடந்த பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அப்போது, தனது வீட்டிலேயே முடங்கிப்போன அந்த இளம் பெண், எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்த நிலையி்ல், சமூக வலைத்தளங்களில் 
தனது நண்பர்களோடு எந்நேரமும் அரட்டை அடித்துக்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

  அந்த சமயத்தில், அவர் ஒரு டேட்டிங் ஆப் வெப் சைட்டில் உறுப்பினராக மாறியதாகவும் கூறப்படுகிறது. 

  இதனையடுத்து, அந்த டேட்டிங் ஆப் மூலமாக இந்த பெண்ணுக்கு பல ஆண் நண்பர்கள் அறிமுகமாகி உள்ளனர். 

  அதன் படி, மும்பைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஒருவர், அந்த இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து, இருவரும் தங்களது செல்போன்
  எண்களை பகிர்ந்துகொண்ட நிலையில், அந்த ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.

  இவர்களது நட்பு பல மாதங்கள் சென்ற நிலையில், இருவரும் நட்பையும் தாண்டி காதல் வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

  இப்படியான சூழலில், கடந்த வரம் அந்த இளம் பெண்ணுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்த இளைஞர் அந்த பெண்ணை
  மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் இருக்கும் ஒரு பைவ் ஹோட்டலில் அவரின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டு, அங்கு அந்த பெண்ணை அழைத்து
  உள்ளார்.

  பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடும் ஆசையில், அந்த பெண் நன்றாக உடையணிந்து கொண்டு, அந்த இளைஞனை நம்பி, குறிப்பிட்ட
  பைவ் ஹோட்டலுக்கு சென்று உள்ளார்.

  அப்போது, அங்கு கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடிய அந்த காதலன், அந்த பெண்ணுக்கு மதுவை குடிக்க கொடுத்து உள்ளார். அதனை வாங்கி அந்த பெண்ணும்
  மதுவை குடித்து உள்ளார். மதுவை குடித்த அடுத்த சிறுது நேரத்தில், அந்த பெண் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். 

  இதனையடுத்து, அந்த காதலன் அந்த ஹோட்டல் ரூமிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று, அவரை மயக்க நிலையில் வைத்தே, பாலிய பலாத்காரம்
  செய்து உள்ளார்.

  பின்னர், அந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தப் போது, தனது ஆடைகள் எல்லாம் கலைந்து கிடந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

  மேலும், அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு சேர்ந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமை குறித்து, அங்குள்ள காவல்
  நிலையத்தில் புகார் அளித்தார். 

  இது குறித்து ஐபிசியின் 376 மற்றும் 328 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வொர்லி போலீசார், சம்மந்தப்பட்ட ஆவின் அகர்வாலை தேடி வந்த நிலையில்,
  தற்போது அவரை அதிரடியாக கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.