வேலை கேட்டு வந்த பெண்ணை, மனைவியை வைத்தே அந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொள்ள வைத்து, அவரது கணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான சாமி என்பவர், தனது மனைவி 30 வயதான நர்சம்மா என்பவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

அத்துடன், கணவன் சாமியும் - மனைவி நர்சம்மா என இருவரும் சேர்ந்து, அந்த பகுதியில் கட்டட வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பணியினை செய்து வந்தனர்.

இப்படியான சூழலில், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு 30 வயதான இளம் பெண் ஒருவர், இந்த கணவன் - மனைவியிடம் வேலை கேட்டு வந்திருக்கிறார்.

அத்துடன், அந்த பெண் கழுத்திலும், கையிலும், நிறைய நகைகளை அணிந்துகொண்டு, வேலை கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வேலை கேட்டு வந்த பெண்ணை பார்த்ததும், கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உள்ளனர்.

பின்னர், வேலை கேட்டு வந்த பெண்ணை, அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயின்டிங் வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அத்துடன், அந்த கட்டிடத்தில் அந்த பெண்ணை தவிர, வேறு யாரும் அந்த நேரத்தில் அங்கு வேலை பார்க்கவில்லை. அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டே அந்த பெண்ணுக்கு அங்கு வேலை கொடுத்த கணவன் - மனைவி இருவரும் அங்கு வந்துள்ளனர்.

அங்கு வந்து அந்த பெண்ணை பார்த்ததும், சாமியும் - மனைவி நர்சம்மாவுக்கு, அந்த பெண் அணிந்திருந்த நகைகள் மீது ஆசை வந்துள்ளது. ஆனால், கணவன் சாமிக்கோ, அந்த பெண்ணை அப்படியும் அடைந்து விட வேண்டும் என்று சபலப்பட்டு, அந்த பெண் மீது காம வலையை விரித்து உள்ளார்.

அதன் படி, அந்த அந்த கட்டிடத்தில் தனியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை, கணவன் சாமியும் - மனைவி நர்சம்மா சேர்ந்து முதலில் மல்லுக்கட்டி உள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணின் கைகளை சாமியின் மனைவி நர்சம்மா பிடித்துக்கொண்ட நிலையில், அந்த பெண்ணை தன் மனைவியின் முன்பே சாமி, பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் அணிந்திருந்த நகைகளை கணவன் - மனைவி இருவரும் பறித்துக்கொண்டு, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

மேலும், இந்த பெண்ணை இப்படியே விட்டால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்று பயந்த தந்த தம்பதி, அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.

இதனையடுத்து, மறுநாள் அங்கு வேலைக்கு வந்த மற்ற பணியாட்கள், அந்த பெண் சடலமாக இறந்து கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்து உள்ளனர். அப்போது, கணவன் சாமியும் - மனைவி நர்சம்மாவும் போலீசாரிடம் வசமாகச் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர்கள் பாலியல் பலாத்கார செய்த குற்றத்தையும், பின்னர் கொலை செய்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைது செய்து, இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.