கள்ளக் காதலின் கொடூரமாக “வாயில் துணியை திணித்து, சுடிதார் துப்பட்டாவால் கணவனின் கழுத்தை இறுக்கி காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பிரதீப், அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பிரதீப்க்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரோகிணி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, அவர்களது வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனையடுத்து, இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து குடிபோதைக்கு அடிமையான கணவன் பிரதீப், அடிக்கடி மது குடித்து விட்டு மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவி ரோகிணியுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்போது, பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் பிரதீப்பின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். அப்போது, நண்பன் சீனிவாசனுக்கும், மனைவி ரோகிணிக்கும், இடையே கள்ளக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கள்ளக் காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.

இந்த கள்ளக் காதல் கதை, எப்படியோ கணவன் பிரதீப்க்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பிரதீப், தன் மனைவியையும், தன் நண்பனையும் அழைத்து கண்டித்து உள்ளார். 

இதனையடுத்து, “பிரதீப்பை உயிருடன் விட்டால் நாம் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பார்” என்று, அவர் மனைவி ரோகிணியும், நண்பன் சீனிவாசனும் நினைத்து உள்ளனர். இதனா,ல் பிரதீப்பை கொலை செய்யவும் அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன் படி, கடந்த 23 ஆம் தேதி இரவு குடிபோதையில் பிரதீப், தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.

அப்போது, அவர் வீட்டிற்கு நண்பன் சீனிவாசனும் வந்து உள்ளார். இதையடுத்து, “தனது பிள்ளைகளைப் பக்கத்தில் வீட்டில் டி.வி பார்க்க” அவர் மனைவி ரோகிணி அனுப்பி வைத்து உள்ளார். 

அதன் பின்னர் சீனிவாசன், பிரதீப்பிடம் “உனது மனைவிக்கு உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. அதனால், அவருக்கு விவாகரத்து நீ கொடுத்து விடு, அவளுக்கு என்னுடன் வாழத் தான் விருப்பம்” என்று, கூறியுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், கடும் போதையிலும், தன் நண்பன் சீனிவாசனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம், கைகலப்பாக மாறி உள்ளது. இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். அப்போது, கடும் ஆத்திரமடைந்த சீனிவாசனும், ரோகிணியும் சேர்ந்து, கணவன் பிரதீப்பை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். அதன் பின்னர், பிரதீப்பின் வாயில் துணியைத் திணித்து கடுமையாகத் தாக்கி உள்ளனர். அதன் பிறகு, கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து, சுடிதார் துப்பட்டாவால் கணவன் பிரதீப்பின் கழுத்தை இறுக்கி கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த பிரதீப்பின் உடலை, வீட்டு படுக்கை அறையில் போட்டு தூங்குவது போல் போர்வையால் மூடி போட்டு உள்ளனர். அடுத்த சிறிது நேரத்தில், பக்கத்து வீட்டில் இருந்து குழந்தைகள் வந்து உள்ளன. அந்த குழந்தைகள், “அப்பா, எங்கே?” என்று கேட்டுள்ளனர். அதற்கு, ரோகிணி, “அப்பா தூங்குவதாக” குழந்தைகளிடம் கூறி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் தூங்க சென்ற நிலையில் ரோகிணியும், சீனிவாசனும் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுத்து உள்ளனர். இதனையடுத்து, மறு நாள் அதிகாலை சீனிவாசன் அங்கிருந்து நிதானமாக வெளியே புறப்பட்டுச் சென்று உள்ளார். 

அதன் பின்னர், “தனது கணவர் குடிபோதையில் இறந்து விட்டதாகக் கூறி, அவரது மனைவி ரோகிணி நாடகம் ஆடியுள்ளார். இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து, அங்கு விரைந்து வந்த சக்கராயப்பட்டணா போலீசார், கொலையான பிரதீப்பின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள கடூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், பிரதீப்பின் வாயில் இருந்து ரத்தம் வந்திருந்ததும், அவரது உடலில் ரத்த காயங்களும் இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், சந்தேகத்தின் பேரில் அவர் மனைவி ரோகிணியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

இதில், “கள்ளக் காதல் விவகாரத்தில், கள்ளக் காதலனுடன் சேர்ந்து ரோகிணியே கணவன் பிரதீப்பை கொலை செய்தது” தெரிய வந்தது. இதையடுத்து, கள்ளக் காதலர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.