“சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும்” என்று ஒருவர் மேட்ரிமோனியல் விளம்பரம் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கமார்புகூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணத்திற்குப் பெண் கேட்டு, மேட்ரிமோனியல் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரம் 
சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால், டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் நிதின் சாங்வான் ஐஏஎஸ் என்ற ஒருவர், செய்தித்தாளில் வந்த இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தைப் பார்த்து ரசித்து விட்டு, அதனைப் போட்டோ எடுத்து தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். 

அந்த புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன், “மணமகன் மற்றும் மணமகள்களே இதைக் கவனியுங்கள்” என்றும், இப்போது, “மேட்சிங் விதிமுறைகள் மாறிவிட்டன” என்றும், அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, அந்த விளம்பரத்தில் ஒரு மணமகன், “தனக்கு திருமணத்திற்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும்” என்பதை விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
  
அதில், அவரைப் பற்றிய குறிப்பில் “சாட்டர்ஜீ 37/5.7 யோகா பயிற்சியாளர், வசீகரமானவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர்” என்று, குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், “எனக்கு வீடு, கார் இருக்கிறது என்றும், பெற்றோருடன் வசித்து வருவதாகவும்” தெரிவித்துள்ள அவர், “கமார்புகூரில் சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருக்கிறது” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன், “எனக்கு வரும் மணமகளிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அதே நேரத்தில் அழகான, கலரான, உயரமான, ஒல்லியான ஒரு பெண் வேண்டும்” என்றும், தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, “எனக்குத் துணையாக வர உள்ள பெண், சமூக ஊட்டங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது” என்றும், அவர் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார். நிதின் சாங்வானின் இந்த டிவிட்டர் பதிவு, தற்போது வைரலாகி வருவதோடு, பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. 

இதில், பதில் அளித்துள்ள பலரும், “இப்படி ஒரு பெண் கிடைப்பது கடினம்” என்று, ஒரு சிலரும், “இது மிகவும் கடினமான விதிமுறைகளாக இருக்கிறது” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சில குறும்புக்கார பெண்கள், “இப்படி பெண்களிடம் எதிர்பார்ப்பதால், வாழ்நாள் முழுவதும் அவர் தனிமையில் வாழப்போகிறார் போல” என்பது போன்றும் பல பெண்கள், அவரை கிண்டல் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்கள் இப்படி கிண்டல் செய்யும் அதே நேரத்தில், திருமணத்திற்கு வரன் தேடும் பல இளைஞர்களும், இந்த பதிவை தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, இணையத்தில் இன்று இந்த டாப்பிக் தான் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.