ஹரியானாவில் மருமகள், மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போனதால், அப்பாவி கணவன் தன்னுடைய 2 குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறார். 

நம் இந்தியா பண்பாட்டுக் கலாச்சார சீரழிவில் வெளிநாடுகளைப் பின்பற்றி வருகிறது என்பதற்கு, மிகச் சிறந்த ஒரு உதாரணம் இந்த செய்தி.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சலீம் என்பவர், தனது மகன் அப்துல் என்ற மகனுக்குக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்து உள்ளார்.

அதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த ஆஸ்மா என்ற பெண்ணை, தன் மகனுக்கு பேசி முடித்த சலீம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார்.

கணவன் அப்துல் - மனைவி ஆஸ்மா இருவரும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு, 2 மகன்கள் அடுத்தடுத்து பிறந்தனர். இதனால், கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில் இந்த தம்பதியினர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மாமனார் சலீமுக்கும், மருமகள் ஆஸ்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாமனார் - மருமகள் இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருந்து உள்ளனர்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்பாடத கணவன் அப்துல், தன் மனைவி உடன் மிகவும் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் அனைவரும் இரவில் உறங்கச் சென்ற நிலையில், காலை எழுந்து பார்த்து உள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த மனைவி ஆஸ்மா மாயமானது தெரிய வந்தது. அத்துடன், தனது தந்தை சலீமும் மாயமானது தெரிய வந்தது. தந்தையும், மனைவியும் காணாத நிலையில், இருவரையும் தேடி அப்துல் அலைந்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் அவர்கள் இருவரும் கிடைக்காததால், அங்குள்ள காவல் நிலையில், “தந்தை - மனைவி காணாமல் போனது தொடர்பாகப் புகார்” அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து உள்ளனர். அதில், “மாமனார் உடன் மருமகள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டை விட்டுச் செல்வது” பதிவாகி இருந்திருக்கிறது.

மேலும், அதிகாலையில் அவர்கள் செல்லும் முன்பாக, “முதல் நாள் இரவு சாப்பாட்டில் வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அனைவரும் மயங்கிய தூங்கிய பிறகு திட்டமிட்டே அதிகாலை நேரத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடியிருப்பதும்” தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசாரிடம் கூறிய கணவன் அப்துல், “வீட்டில் இருந்தவரை யாருக்கும் சந்தேகம் வராத வகையில், என் தந்தை சலீமும், மனைவி ஆஸ்மாவும் எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி, இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்கள் என்று என்னால் நம்பவே முடியவில்லை” என்று, கூறி உள்ளார். 

இதனையடுத்து, மனைவி தந்தையுடன் ஓடிப்போன நிலையில், தன்னுடைய 2 பிள்ளைகளுடன் அப்பாவியாய் அப்துல் நிற்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருப்பதாக ஊர் மக்கள் கூறி உள்ளனர். 

இதனிடையே, மருமகள், மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம், அந்த குடும்பத்தினருடன் சேர்த்து அந்த ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.