சிறுமிகளின் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்யும் கும்பல் ஒன்று, அவர்களிடம் ஆபாச புகைப்படங்களை அனுப்பச் சொல்லி மிரட்டி வரும் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழிற் நுட்பங்கள் யாவும், அழிவுக்காக கண்டுப்பிடிக்கப் படுவதில்லை. அதைப் பயன்படுத்தும் மனிதன் தவறாகப் பயன்படுத்தும் போதுதான், அது அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதே உண்மை. இப்படி தான், பணத்திற்காகவோ, சுகத்திற்காகவோ சிலர் இந்த சமூக்தில் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதோ, பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது அனைவரையும் பீதி அடைய செய்யும் வகையில் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளை சில கும்பல் குறிவைத்து உள்ளது. அதாவது, குஜராத் மாநிலத்தில், சில பள்ளி சிறுமிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக, புதிதாக வந்த சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமிகள் சிலர், தங்களது புகைப்படங்களைப் பதிவிட்டு வருவது வழக்கம். அப்படி, அதிக அளவில் புகைப்படங்களைப் பதிவிடும் சிறுமிகளை குறிவைத்த கும்பல் ஒன்று, சிறுமிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து உள்ளது. அதன் பிறகு, சம்மந்தப்பட்ட சிறுமிகளிடம், “உன் ஆபாசப் போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பு” என்று மிரட்டல் விடுத்து உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது, இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 7 புகார்கள் போலீசாருக்கு வந்திருப்பது தெரிய வந்தது.

போலீசாருக்கு, இது போன்று அடுத்தடுத்து புகார்கள் வரத் தொடங்கியதால், என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போலீசார், மும்பை போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். 

அதன்படி, மும்பை சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சம்மந்தப்பட்ட நபரை டிராக் செய்து கண்டுபிடித்தனர். அதன் படி, அந்த நபரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்ததை ஒப்புக்கொண்டான்.

மேலும், இது போன்று, மொத்தம் 800 பெண்களை மிரட்டி உள்ளதும், இதில் சுமார் 700 பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை மிரட்டி வாங்கி உள்ளதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் 20 வயதான அல்ஃபாஸ் ஜமானி என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த இளைஞன் மீது பாலியல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, சிறுமிகளிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் யாருக்கும் விற்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்காக வரும் 12 ஆம் தேதி காவலில் எடுத்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், சிறுமிகளின் பெற்றோர் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர்.