மகளின் வருங்கால மாமியாருக்கு காதல் வலை விரித்த தந்தையால், திருமணம் நின்று போனது. இதனால், விரக்தி அடைந்த மகள், தனது தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் ஆனந்தபூரின் சவுபாகா மஜிபாரா என்னும் பகுதியில் 22 வயதான இளம் பெண் மாஜி, தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். 

மாஜி, தன்னுடைய தாய் சுசாமா மற்றும் தந்தையோடு வசித்து வந்தார். இப்படியான நிலையில், மாஜிக்கு திருமண வயது வந்து விட்டதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன் படி, அவர்கள் வரன் பார்த்து வந்த நிலையில், தங்களது மகளுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு இளைஞனோடு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயம் செய்தனர். 

அதன் பிறகு, மாப்பிள்ளையின் தாயார் திருமணம் விசயமாகப் பேசு அடிக்கடி பெண் வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார். அப்போது, மணப்பெண்ணின் தந்தை 
தனது மகளுக்கு வரப்போகும் வருங்கால மாமியார் மீது ஆசைப்பட்டதாகத் தெரிகிறது. இதில், சற்று சபலப்பட்ட மணப்பெண்ணின் தந்தை, சம்மந்தி என்றும் பார்க்காமல், மகளின் வருங்கால மாமியாரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விசயம் வெளியே தெரிந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை குடும்பத்தினர், இந்த கல்யாணத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள். அதனால், அந்த மணப்பெண் மாஜி, மிகவும் மனம் நொந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில், அந்த பெண்ணின் தந்தை சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு, தனது வீட்டில் ஓய்வில் இருந்து கொண்டு வந்தார். 

அப்போது, அவரின் மகள் மாஜி, தந்தையின் அறைக்குள் சென்று தந்தை என்றும் பார்க்காமல், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். இதில், அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தந்தையை, மகளே கையால் கழுத்தை நெரித்துக் கொன்றது” தெரிய வந்தது.

இதனையடுத்து, தந்தையை கொலை செய்த மகளை போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, தனது தந்தையை கொலை செய்ததை, அந்த மகள் ஒப்புக்கொண்டார். அப்போது, கொலை செய்ததுக்கான காரணத்தையும் அவர் கூறி உள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.