இந்திய பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்போம் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு கூட்டத்தில் ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி உரையாற்றினார். 

We will restore Indian economic growth - PM Modi

அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.

“கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக இருக்கின்றது” என்றும், பிரதமர் மோடி கூறினார்.

“இந்தியா பொருளாதார வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும். கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், “கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் இந்திய பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

We will restore Indian economic growth - PM Modi

குறிப்பாக, “மேட் இன் இந்தியா பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதே எனது ஆசை” என்றும் பிரதமர் மோடி, தன்னுடைய கனவை நினைவூட்டினார்.

“இந்தியா தொழில் துறையில் மீண்டும் வளர்ச்சி பெறும் என்றும், என்னை நம்புங்கள் என்றும், நான் இதை எப்படி நம்புகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்” என்று கூறிய பிரதமர் மோடி, “இந்தியாவின் திறமை மற்றும் புதுமை, அதன் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, அதன் தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். 

அத்துடன், “இந்திய வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது அவ்வளவு கடினம் அல்ல என்றும், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கான பாதை தொழில்துறைக்கு முன்பாக உள்ளது என்றும், நாம் இன்னும் பலமடைந்து உலகில் முன்னேறுவோம்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை ஒளி பாய்ச்சினார்.