உள்ளாட்சிமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்காக, 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

Tamil Nadu local body election results

இதனால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமார் 27 மணி நேரத்தைத் தாண்டி, தற்போது வரை நடைபெற்று வருகிறது  

இந்நிலையில், சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை 

நிறைவடைந்த நிலையில், எஞ்சிய 6 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக இன்னும் நிறைவடையவில்லை.

இதனிடையே, காலை 10 மணி நிலவரம் படி, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 2,266 வெற்றிகளும், அதிமுக 2,110 வெற்றிகளும், அமமுக 90 வெற்றிகளும், நாம் தமிழர் 1 வெற்றியும், மற்றவர்கள் 425 வெற்றிகளும் பெற்றுள்ளனர்.

அதேபோல், மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 259 இடங்களில் முன்னிலையும், அதிமுக 237 இடங்களில் முன்னிலையும் வகிக்கின்றன.

Tamil Nadu local body election results

இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.