Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணி மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு செய்யப்போகும் பேருதவி! வைரலாகும் சிறப்பு பேட்டி இதோ

Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணி மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு செய்யப்போகும் பேருதவி! வைரலாகும் சிறப்பு பேட்டி இதோ - Daily news

தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக திகழும் செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர்.விமலா ராணி அவர்கள் தனது சீக் ஃபவுண்டேஷன் சார்பில் பல கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த டாக்டர்.விமலா ராணி அவர்கள் மலை கிராமங்களுக்கு செய்யப் போகும் நலத்திட்டங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.  அந்த வகையில்

“நீங்கள் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறீர்கள் நீங்கள் எதைத்தான் செய்யவில்லை என்று கூறுங்கள் ஏனென்றால் அவ்வளவு செய்கிறீர்கள் நீங்கள் வேறு என்ன புதிதாக செய்ய இருக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது,  “இப்போது நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நாங்கள் எங்கள் சீக் ஃபவுண்டேஷனிலிருந்து, அண்டை கிராமங்களில் மலைவாழ் மக்களுக்காக சில விஷயங்களை செய்ய இருக்கிறோம். இன்றைக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் இன்னமும் இருக்கிறார்கள். மலைவாழ் மக்கள் மின்சார வசதி இல்லாமல் போக்குவரத்து வசதி கல்வி வசதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் நகரப் பகுதியில் உள்ளோம். ஆம் உண்மைதான் ஒவ்வொரு வருடமும் எங்கள் பணிகளை துவங்குவதற்கு முன்னால் எங்கு எங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது என்று ஒரு ஆராய்ச்சி பட்டியலை எடுப்போம். அதில் பார்க்கும் போது இன்றைக்கும் மலைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மின்சாரம் கல்வி சாலை வசதிகள் எதுவும் இல்லாமல் இன்னமும் உலகத்தின் மறுபக்கத்தை பார்க்காமலேயே இருக்கிறார்கள். அதனால் எங்கள் சீக் ஃபவுண்டேஷனில் இந்த வருடத்தில் இருந்து மலைவாழ் கிராமங்களுக்காக நாங்கள் எங்கள் பணிகளை முழுமையாக முன்வைக்க உள்ளோம்." என்றார்.
 
தொடர்ந்து அவரிடம் அந்த மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்காக என்னென்ன செய்ய இருக்கிறீர்கள்? எனக் கேட்டபோது, “இப்பொழுதுதான் ஆராய்ச்சி பட்டியலை  தயார் செய்து வருகிறார்கள். என்னை பொருத்தவரை என் முதன்மை நோக்கம் எப்பொழுதுமே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான். அதனால் முதலில் கல்வியை சார்ந்து அங்கு ஒரு சின்ன முன்னேற்றத்தை அமைக்க உள்ளேன். இன்றைய கணினியின் வசதிகள் மூலம் நாம் நேரில் வர முடியவில்லை என்றாலும் இணைய வாயிலாக கூட நாம் செய்ய முடியும் ஆசிரியர்களை நியமித்து நாம் இதை செய்ய முடியும்.  அல்லது மிகவும் அடிப்படையான ஒரு வாழ்க்கைக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றால் முதலில் கழிப்பறைகளை அமைத்துக் கொடுப்பது, அதைத் தொடர்ந்து அடிப்படை தேவைகளில் அடுத்த கட்டமாக என்ன தேவைப்படுகிறது என பார்க்கிறோம். சில கிராமங்களை பார்த்து இருக்கிறார்கள். அந்த கிராமங்களுக்கு அடுத்த கட்டமாக என்னென்ன தேவை என்பதை ஆய்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதன்படி அடுத்த கட்டமாக, ஒரு சிறந்த கட்டமாக அது இருக்கும் என சொல்லிவிட முடியாது .உடனடியாக எல்லாவற்றையும் மிக சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்து விட முடியாது. அடுத்தடுத்த கட்டமாக ஒவ்வொன்றாக செய்யலாம். இப்போதைக்கு அடுத்து என்ன செய்ய முடியுமோ அதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட செயின்ட் பிரிட்டோ அகாடமி செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

Leave a Comment