தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

KA Sengottaiyan

“தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்பாக, “பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

Special classes should not be held for 10th examination

அத்துடன் சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள், வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதனிடையே, தருமபுரி மாவட்டம் அரூரில் அரசின் விதிமுறைகளை மீறி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சியர் சார் ஆட்சியர் உத்தரவின்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.