படிக்கும் பள்ளிகளிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதலாம் என்று, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

10 Public exam will issued june last

இதனிடையே, ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, நடைபெறும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், “சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வுகள் நடைபெறும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், “தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், “தேர்வுப்பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும்” பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 

10 Public exam will issued june last

“ஏற்கெனவே 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலத்தில் மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க, தற்போது 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்” என்றும், பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், “தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்குச் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள்” பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.