புதிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசால் தொடர்ந்து  பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது... பழைய 500, 1000 ரூபாய் மதிப்பிழக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து இதுபோல் இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததை அடுத்து இப்பொழுது மத்தியில் ஆளும் பா.ஜ.க வின் பார்வை புதியதாக கல்வியின் பக்கம் திரும்பியுள்ளது..இஸ்ரேல் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கல்வி கொள்கையில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருகிறது புதிய கல்வி கொள்கை 2020 என்னும் பெயரில்... கடந்த மாதம் இந்த அறிக்கையின் வடிவில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழி கொள்கை, இதை 8- ம் வகுப்பு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும், அதனை தொடர்ந்து 5- ம் மற்றும் 8- ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு அரசு பொது தேர்வுகளும்,மும்மொழி கொள்கை என்னும் பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிரத  திணிப்பு.. அடுத்ததாக நடைமுறையில் உள்ள 1 முதல் 5 ம் வகுப்பு,6 முதல் 10 ம் வகுப்பு.மற்றும் 11, 12  வகுப்பு முறையை ரத்து செய்து 1 முதல் 5 ம் வகுப்பு, 6 முதல் 8 ம் வகுப்பு மற்றும் 9 முதல் 12 ம் வகுப்பு முறை  என்ற புதிய நடைமுறையை கடைபிடிக்க உள்ளது... இதன் அடிப்படையில் தான் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வு முறை.. அதுமட்டுமில்லாமல் 1 முதல் 12 வகுப்பு வரை நாடு முழுவதும் ஒரே வகையான பாடத்திட்டமும் ,கட்டாய கல்வி மற்றும் இலவச கல்வியும் வழங்க திட்டமிட்டுள்ளது...

பள்ளி கல்வியை தொடர்ந்து உயர் நிலை கல்வியில் சட்டம் மற்றும் மருத்துவம் தவிர நாடு முழுவதும் மற்ற பாடப்பிரிவுகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் கொண்டு வர உள்ளனர்... இளநிலை கல்வி ஆண்டுகள் 3 அல்லது 4 ஆண்டுகள் வரையும் முதுக்கலை பிரிவில்   1 அல்லது 2 ஆண்டுகள் வரையும் மாற்றப்பட இருக்கிறது.. இதனை தொடர்ந்து  M.pil  முற்றிலுமாக நீக்கப்பட்டது. பள்ளி கல்வி முடித்து வெளிவரும் 12 ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனைத்து கல்லூரிகளிலும் நுழைவு தேர்வுகள்.. இந்த நுழைவுத்தேர்வுகள் கட்டாயமில்லை என்றாலும் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.. 

இந்த புதிய கல்வி கொள்கை 2020 அறிக்கை வெளியிட்ட பின் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் தமிழக அளவில் பல அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள்,
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்..  நாடே இந்த கொரோனா என்னும் கொடிய நோயிடம் சிக்கி தவிக்கும் நிலையில் ... நமக்கு வேண்டாத கொரோனா உடன் புதிய கல்வி கொள்கை என்னும் பெயரில் கல்வியையும் இந்த இக்கட்டான காலத்தில் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது..