பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் Friendship படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் லாஸ்லியா.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை,மாயா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி நடிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axxess பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசரவணன் இயக்கவுள்ளார்.பூர்ணேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை லாஸ்லியா ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பாதிப்பு குறைந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.