ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், 43 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், கடந்த 7 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.

Hc order to close tasmac till Lockdown

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு சின்னம் அணிந்து தங்களது வீடுகளுக்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, சென்னையைத் தவிரத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் விற்பனையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வீடு வீடாக டோர் டெலிவரி செய்யும் வகையிலோ முடிவெடுக்க வேண்டும் என்று, அறிவுறுத்தியது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

மேலும், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.