தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக 61 வயதான ஜெ.அன்பழகன் இருந்து வருகிறார். சென்னை தி.நகரில் வசித்து வந்த ஜெ.அன்பழகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

DMK MLA J Anbazhagan tests positive for COVID 19

இதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரு. கிறார்.

இந்நிலையில், ஜெ.அன்பழகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. 

DMK MLA J Anbazhagan tests positive for COVID 19

அத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், திமுகவில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.