வீடு புகுந்து 9 ஆம் வகுப்பு மாணவியை, வங்கி ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கோவையைச் சேர்ந்த ராம்குமார், அங்குள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

 Covai 9th standard girl sexually raped

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி, பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வீட்டிற்குள் அத்துமீற நுழைந்த ராம்குமார், சிறுமியை வலுக்கட்டாயமாக அடித்துத் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த அவலங்களைக் கூறி, சிறுமி அழுதுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ராம்குமாரைக் கைது செய்து, கோவை மத்தியில் சிறையில் அடைத்தனர்.

 Covai 9th standard girl sexually raped

இதனிடையே, கடந்த ஒரு வருடமாகக் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.