“நீங்கள் கனவு காணவில்லை.. அடடா கண்கொள்ளாக் காட்சி” என்று பதிவிட்டு, தோனி - சுரேஷ் ரெய்னா விளையாடும் புகைப்படத்தை CSK அணி வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் இந்த ஆண்டு வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSK Dhoni Raina picture IPL 2020

2 அணிகளுமே சம பலம் பொருந்திய அணிகள் என்பதாலும், குறிப்பாக, 2 அணிகளும் ஐ.பி.எல். பகை கொண்ட அணிகள் என்பதாலும், இந்த ஆண்டின் முதல் போட்டியானது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனால், இரு அணி ரசிகர்களும், இணையத்தில் அட்டகாசம் செய்து வருகின்றனர். 

இதனிடையே, ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடும் முனைப்பில் சென்னை அணி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CSK Dhoni Raina picture IPL 2020

இதனால், CSK அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை, CSK அணி நிர்வாகம் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று CSK அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன், “நீங்கள் கனவு காணவில்லை.. அடடா கண்கொள்ளாக் காட்சி” என்ற வாசகத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

CSK Dhoni Raina picture IPL 2020

அதன்படி, சுரேஷ் ரெய்னா, லாங் ஆன் திசையில் பந்தை சிக்ஸருக்கு அடிக்க, ஸ்டம்புக்கு பின்னாடி கேப்டன் தோனி கீப்பிங் செய்கிறார். 

தோனி - சுரேஷ் ரெய்னா விளையாடும் புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.