உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கொரோனா என்னும் பெருந்தொற்று, உலகியே மிக கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவியது முதல், தற்போது வரை அதன் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்தே காணப்படுகிறது.

coronavirus death toll 3.46 lakh worldwide

இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு உலகிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்து 86 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 1,306 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பிரேசிலில் 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

அதேபோல், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 9 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

coronavirus death toll 3.46 lakh worldwide

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,97,416 ஆக அதிகரித்துள்ள நிலையில், 55 லட்சத்தை நெருங்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,46,668 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,01,898 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என சீனா தற்போது அறிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு ரஷியா தற்போது புதிய மருந்து கண்டு பிடித்துள்ளது. இந்த மருந்து மீதான மருத்துவ பரிசோதனைகள் இன்னும் 8 வாரங்களுக்குள் முடிந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது.