சென்னையில் 5,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000ஐ நெருங்கி வருவது, சென்னைவாசிகளை கடும் பீதியடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில்தான் கோராத் தாண்டவம் ஆடி வருகிறது.

coronavirus Chennai update 5,637 test positive

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 971 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,000ஐ நெருங்கி வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக, 895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2 வது இடத்திலும், 699 பேருடன் திரு.வி.க.நகர் 3 ஆம் இடத்திலும் உள்ளது.

அதேபோல், தேனாம்பேட்டையில் 608 பேரும், அண்ணா நகரில் 468 பேரும், வளசரவாக்கம் 461 பேரும், தண்டையார்பேட்டையில் 437 பேரும், அடையாறு பகுதியில் 276 பேரும், திருவொற்றியூர் பகுதியில் 127 பேரும், மாதவரம் பகுதியில் 85 பேரும், மணலியில் 75 பேரும், பெருங்குடியில் 72 பேரும், ஆலந்தூர் பகுதியில் 67 பேரும், சோழிங்கநல்லூர் பகுதியில் 64 பேரும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus Chennai update 5,637 test positive

தற்போது, குன்றத்தூரில் கோயம்பேடு சந்தை வியாபாரி உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

குறிப்பாக, சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகச் சென்னையில் 5,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 45 ஆக அதிகரித்துள்ளது.