தாயை மகனே உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பழம் பெருமையை வாய்ந்த சீனாவில் தான், இந்த நிகழ்வு நடந்துள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில் 58 வயதான மகன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் தாயைப் பராமரித்து வந்துள்ளார். 

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிற, தாயை கவனித்துக்கொள்ள மகனால் முடியவில்லை. இது குறித்து யோசித்த மகன், கடந்த 2 ஆம் தேதி அன்று, தன் தாயை வீட்டின் அருகே உள்ள குழியில் உயிருடன் புதைத்துள்ளார். இதனையடுத்து, வழக்கம் போல், தன் பணியை மேற்கொண்டுள்ளார்.

China mother buried alive Recovery after 3 days

இதனையடுத்து, தன் மாமியாரைக் காணவில்லை என்று தேடிய அவரின் மருமகள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன், தன் மாமியாரைக் கடைசியாகத் தனது கணவருடன் பார்த்ததாகவும், அவர்தான் தன் மாமியாரை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றதாகவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். 

தயார் காணாமல் போய், 3 நாட்களுக்குப் பிறகு அந்த குறிப்பிட்ட நபரிடம் விசாரணை நடத்திய போலீசார், உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதன்படி, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அந்த இடத்தை தோண்டிப்பார்த்த போது, உயிருடன் 3 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அந்த வயது முதிர்ந்த பெண், உயிருடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து,  வழக்குப் பதிவு செய்த போலீசார், தாயை உயிருடன் மண்ணில் புதைத்த மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகதிமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.