கள்ளக் காதல் முற்றிய நிலையில் நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே சீரியல் நடிகர் நடிகைகளின் கள்ளக் காதல் விவகாரம் சந்தி சிரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது, சீரியல் நடிகை ரேகாவின் கணவர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Chennai serial actress rekha husband suicide

சென்னை பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்த 39 வயதான கோபிநாத், அண்ணாநகர்  டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி நடிகை ரேகா, சீரியலில் தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதே நேரத்தில், டி.வி.யில் தொகுப்பாளினியாகவும் உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

Chennai serial actress rekha husband suicide

இதனிடையே, கோபிநாத் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், கோபிநாத்துக்குத் தகாத உறவு இருந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் எப்படியோ மனைவிக்குத் தெரிய வர, இருவருக்குள்ளும் தினமும் வீட்டில் சண்டை நடந்துள்ளது. இதனால், கோபிநாத் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

மேலும், அவருக்குக் கடன் பிரச்சனையும் இருந்துள்ளது. இந்த 2 பிரச்சனையும் அவரின் கழுத்தை நெறிக்கவே, அவர் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளார். 

Chennai serial actress rekha husband suicide

இதனால், தற்கொலை செய்ய முடிவெடுத்த அவர், நேராக அலுவலகத்திற்குச் சென்று, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு வேறு எதுவும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.