சென்னையில் பெண் வேடமிட்டு பெண்களை மயக்கிய ரகசியங்களைக் கறக்கும் மன்மத இளைஞன், அதன் பிறகு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் வாகனங்களுக்குக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த ரத்தினக் குமார் என்பவர் தான், இந்த தில்லாலங்கடி மன்மதனாக வலம் வந்திருக்கிறார்.

கார் மற்றும் பிற வாகனங்களுக்குக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தில் பணி என்பதால், வசதியான பெண்களின் தொலைப்பேசி எண்களைச் சேகரித்து, தனியாக வைத்திருந்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்களுக்கு போன் செய்து மிகவும் அந்தரங்கமாகப் பேசுவதை அவன் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ரத்தனக் குமார் பணியாற்றி வந்த நிறுவனத்தை, ஒரு தொழிலதிபர் தம்பதியினர் நடத்தி வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னுடைய நிறுவனத்தின் மேலாளர் தானே என்று, நம்பிய அந்த தொழிலதிபரின் மனைவி, அவனிடம் திருமணத்திற்கு முன்பனா தன்னுடைய காதல் கதை கூறி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அதை வைத்தே அந்த தொழிலதிபரின் மனைவியை ரத்தினக் குமார் தொடர்ந்து மிரட்டத் தொடங்கி உள்ளார். இதனால், பயந்து போன அந்த தொழிலதிபரின் மனைவி, அவனுடைய மிரட்டலுக்கு அஞ்சி நடந்து உள்ளார்.

அதன்படி, “நீ ஆடையின்றி இருக்கும் புகைப்படம் எனக்கு வேண்டும். இதை உடனே அனுப்பு” என்று, அவன் மிரட்டி உள்ளான். அவன் மிரட்டலால் வேறு வழியின்றி அந்த தொழிலதிபரின் மனைவியும் தன்னுடைய ஆபாசப் படத்தை அவனுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த ஆபாசப் படத்தை வைத்தே, “என்னுடைய ஆசைக்கு இணங்கும் படி” மறுபடியும், அந்த தொழிலதிபரின் மனைவியை மிரட்டி உள்ளார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, இதற்குக் கடைசி வரை உற்றுக்கொள்ளவே இல்லை. அப்படியென்றால், “எனக்கு இவ்வளவு பணம் வேண்டும்” என்று, அந்த பெண்மணியிடம் அடிக்கடி பணம் பறித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த பெண் மணியும் வேறு வழியின்றி அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அதிகப்படியான தொகை கேட்கவே, இதன் விபரீதத்தைப் புரிந்துகொண்ட அந்த பெண், தன் கணவனிடம் அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறி, தான் அவனிடம் மாட்டிக்கொண்டு இருப்பதாகக் கதறி இருக்கிறர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த தொழிலதிபரான கணவன், தன்னுடைய நண்பர்கள் உதவியுடன், ரத்தனக் குமாரின் செல்போனை பறித்துக்கொண்டு அவற்றைப் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த செல்போனில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதில், ரத்தினக் குமார் பல பெண்களுடன் பெண் வேடமிட்டு இருக்கும் புகைப்படங்கள் நிறைய இருந்து உள்ளன. இது குறித்து, அவனிடம் விசாரித்த போது, “இப்படி, பெண்களைப் போலவே ஆடை அணிந்துகொண்டு அவர்களிடம் பழகினால், பெண்களும் நம்மிடம் நெருங்கிப் பழகுவார்கள் என்றும், அப்போது தான் அவர்கள் தங்களுடைய அந்தரங்க விவகாரங்களைக் கூச்சமின்றி நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்பதற்காகத் தான், இப்படி பெண் வேடமிட்டதாகவும்” அவன் கூறியுள்ளான்.

இதனைக் கேட்டு, இன்னும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அவனை கையும் களவுமாகப் பிடித்து, ஆதாரத்துடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவன் தனது சொந்த செல்வாக்கில் காவல் நிலையத்தில் இருந்து தப்பிய அவனை, போலீசார் மீண்டும் நேற்றைய தினம் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மோசடி சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.