தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ள 395 இடங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதியில் முழு வீச்சில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

 395 restricted areas in Tamil Nadu

குறிப்பாக, கொரோனா தொற்றால், மாவட்டத்தில் 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பகுதிகள் மற்றும் அந்த மாவட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட (Containment Zone)  பகுதிகளா மத்திய - மாநில சுகாதாரத்துறை அறிவித்து, பல்வேறு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேலும், அப்படி அறிவிக்கப்படும் பகுதியிலிருந்து, யாரும் வெளியே செல்லா முடியாத வகையிலும், அதே சமயம் யாரும் வெளியிலிருந்து உள்ளே வர முடியாத அளவிலும் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
 
இப்படியாக, சென்னையில் மட்டும் 112 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

அதன்படி, அந்த பகுதியில் உள்ள மக்கள், அத்திவாசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்லாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகள் மற்ற பகுதிகளிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. 

 395 restricted areas in Tamil Nadu

சென்னையிலேயே, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பேரைப் பாதித்துள்ளதால், அந்த பகுதியில் 3 கட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 273 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள், முழுவீச்சில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் 395 கட்டுப்பாட்டுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில், பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அரசு அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய, அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா வைரஸ் தொற்று உள்ள பகுதிகள் மற்றும் வீடுகளில் நாள் தோறும் மாநகராட்சி மருத்துவ குழுவினர் சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை முழுவதும் சுமார் 20,19,711 வீடுகளிலும் பொதுமக்களுக்குச் சளி , இருமல் மற்றும் காய்ச்சல் ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று மாநகராட்சி பணியாளர்கள், கணக்கீடு எடுக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.