சமூக வலைத்தளத்தில் தொடங்கிய காதல் பழக்கம், உல்லாச இன்பத்தில் ஈடுபட வைத்து, வீட்டிலேயே 16 வயது சிறுமி குழந்தை பெற்றுக்கொண்ட அவல நிலை அரங்கேறி உள்ளது.

“காதல்” என்ற பெயரில், இந்த சமூக வெளிகளில் அவிழ்த்து விடப்படும் கட்டுக்கடங்காத காம வெறியாட்டம் சம்பவங்கள் எல்லாம், இந்த சமூகத்தில் வரைமுறை இன்றி நாள் தோறும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இதில், சிறுவர் சிறுமிகள் தெரிந்தும் தெரியாமலும் சிக்கி நாளடைவில் தங்களது வாழ்க்கையைத் தொலைத்து விட்டுப் பரிதவித்து நிற்கும் அவல நிலைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமிக்கு நடந்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 18 வயது இளைஞர் ஒருவர், 16 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகம் ஆகி உள்ளார். அந்த அறிமுகத்தின் போது, அந்த இளைஞனுக்கு 16 வயசு மட்டுமே இருக்கும் என்றும், அந்த சிறுமிக்கு 14 வயது மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி, சிறுவர் - சிறுமிகள் இருவரும் சமூக வலைத்தளத்தில் தினமும் பேசிக்கொள்ளத் தொடங்கினர். இந்த பழக்கம், அவர்களுக்குள் நட்பாக மாறியது. அந்த நட்பு அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு காதலை வளர்த்து விட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுவர் - சிறுமிகள் இருவரும், நேரில் சந்தித்துப் பேசத் தொடங்கினர். இப்படி, அடிக்கடி சந்தித்து வெளியே சுற்றித் திருந்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி மாதம் இந்த இளைஞன் வீட்டில் பெற்றோர்கள் வெளியே சென்று உள்ளனர். அந்த நேரம் பார்த்து, அந்த 16 வயது சிறுமி மீது இனம் புரியாத ஈர்ப்பில் சபலப்பட்ட அந்த 18 வயது இளைஞன், சிறுமியை எப்படியோ சம்மதிக்க வைத்து, தன் வீட்டிற்கு வர வைத்து உள்ளான்.

சிறுமியும் அந்த இளைஞனின் பேச்சைக் கேட்டு அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியிடம் ஆசை ஆசையான சில வார்த்தைகளைப் பேசி, அந்த இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இப்படி, அவர்கள் இருவரும் நாள் முழுக்க அந்த வீட்டில் இருந்து விட்டு, அன்று மாலை தான், அந்த சிறுமி தன் வீட்டிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, 3 மாதங்கள் கடந்த நிலையில், தான் கர்ப்பம் அடைந்து உள்ளதை, சிறுமி உணர்ந்து உள்ளார். அதைக் கலைக்க வழி தெரியாமல் தவித்த அந்த சிறுமி, வயிறு பெரிதான காரணத்தால், இந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பிரசவ பரிசோதனைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதைக் கண்ட மருத்துவர்கள், முதலில் சிறுமிக்குக் குழந்தை பிறக்க உதவி செய்துள்ளனர். அதன்படி, சில அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியின் வீட்டிலேயே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, மீண்டும் அதே நர்சிங் ஹோமிற்கு அந்த சிறுமி சிகிச்சைக்காகச் சென்று உள்ளார். அப்போது, நர்சிங் கோமிங்கிலிருந்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நர்சிங் ஹோமிற்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி அந்த இளைஞன் உடனான பழக்கத்தைத் தொடக்கம் முதலே எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார்.

அதன்படி, அந்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.