சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போலீஸ் அதிகாரி தற்போது அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

டெல்லியில் ஒரு பெண் மற்றும் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். இது குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு இருந்த பகுதியில் இருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, பெண் மற்றும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அந்த மர்ம நபரை போலீசார் கண்டு பிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, அந்த நபரை, போலீசார் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் போக்குவரத்து காவலர் புனீத் கிரேவால் என்பது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பிறகு,  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு, நீதிமன்ற காவலில் அவரை எடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போக்குவரத்து காவலர் புனீத் கிரேவால் “தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக” தெரிய வந்துள்ளது. அதன் படி, அவர் மீது ஐபிசி 354 டி, 354 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால் துணைக் காவல் ஆய்வாளர் புனீத் கிரேவாலின் பதவியும் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், நாமக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் அடுத்து உள்ள முபாரக் அலி என்கிற 63 வயது முதியவர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை முதியவர் ஒப்புக் கொண்டதாக” கூறப்படுகிறது.

இதனால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, முபாரக் அலியை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், மயிலாடுதுறை அருகே காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடியை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.