ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகியுள்ளார் அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார்

ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக அக்னி மற்றும் ஷபானா நடித்து வருகின்றனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.

இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன.

புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.பல பிரச்சனைகளை,பல புது என்ட்ரியை கடந்து இந்த தொடர் 1300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக சென்று வருகிறது.

பரபரப்பாக சென்று வரும் இந்த தொடரில் இன்னும் பரபரப்பை கூட்டும்படி சில புது என்ட்ரிகள் இணைந்துள்ளனர்.ப்ரியா ராமன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்,இவருடன் விஷ்ணு உன்னிகிருஷ்ணன்,ப்ரீத்தா ரெட்டி,யமுனா சின்னதுரை உள்ளிட்டோர் இணைந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by TAMIZH TV NEWS (@tamizhtvnews)