கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.பி எஸ் மித்ரன் இயக்கத்தில் தயாராகும் சர்தார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் கார்த்தி.

பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் தேதி சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.விருமன்,சர்தார் படங்களின் ரிலீஸ் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளன.

இதில் முதலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி விருமன் படம் வெளியாகவுள்ளது.இதனை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது.அடுத்தபடியாக தீபாவளிக்கு அக்டோபர் மாதம் சர்தார் படம் வெளியாகவுள்ளது.அடுத்தடுத்து 3 மாதங்களில் 3 வித்தியாச படங்கள் மூலம் நம்மை அசரவைக்க காத்திருக்கிறார் கார்த்தி.