தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

முன்னதாக விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், அக்னிசிறகுகள் & காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் கொலை மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, தனஞ்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதி கட்டத்தை நெருங்கி வரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு டையு மற்றும் டாமன் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது டையு & டாமனில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#MazhaiPidikathaManithan #MPM #மழைபிடிக்காதமனிதன் completes the Diu-Daman schedule.💐🔥🏆@vijayantony @r_sarath_kumar @meghaakash #Saranyaponvannan @sharma_murli @dhananjaya_ka @AmbarPruthvi @infinitifilmventures @donechannel1 @ctcmed pic.twitter.com/o1bZAan8Tz

— sd.vijay milton (@vijaymilton) March 3, 2022