2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் எச்.வினோத். அந்த படம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து . அதற்கு முன் ரா.பார்த்திபன் மற்றும் விஜய் மில்டன் இயக்கிய பச்சை குதிரை & கோலி சோடா ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். பிறகு நடிகர் கார்த்தியின் நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். அதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹிந்தி மொழியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கினார். நேர்கொண்ட பார்வை பொதுமக்களிடையே நல்ல மதிப்பும் வரவேற்பும் பெற்றதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.போனி கபூர் தயாரிப்பில் வலிமை 2022 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வெற்றிக்கொண்டாட்டமாக காணப்படுகிறது.

அண்மையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனரிடம் அஜித் பற்றி தெரியாத ஒரு விஷயம் என்று கேட்ட பொழுது: "நான் நிறைய இடத்தில் குறிப்பிட்டுள்ளேன் அதாவது அவர் சிறப்பாக பைக் ஓட்டுவார் மற்றும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒன்று அவர் நிதி பொருளாதாரத்தை அழகாக கையாளக்கூடியவர். அவரே அவருடைய கணக்குகளை பார்த்துக்கொள்ள கூடிய ஒரு பிரமாதமான அகவுண்டன்ட் அவர் நிறைய பேருக்கு கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால் நிதிநிலையை சரியாக கையாளுங்கள். நீங்கள் வரி கட்டுபவர் என்றால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் வரிக்காக தனியாக ஒரு வங்கிக்கணக்கில் எடுத்து வைத்துவிடுங்கள். அப்பொழுது தான் உங்களுக்கு எந்தவித வருத்தமும் இருக்காது .எந்த வித தவறான யோசனையும் வராது.நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 10 சதவிகிதம் தொண்டு நிறுவனத்திற்காக எடுத்து வைத்துவிடுங்கள். நீங்கள் நன்றாக சம்பாதித்து நல்ல நிலைமையில் இருக்கும் பொழுது கண்டிப்பாக உதவி செய்யலாம் . உதவி கேட்டு வருவார்கள். சரியான ஆட்களுக்கு உதவி செய்ய பணத்தை எடுத்து வைத்துவிடுங்கள்.அதன்பிறகு தான் உங்களுடைய தினசரி செலவுகளுக்கு திட்டம் செய்ய வேண்டும். இப்படி செய்யதால் அகலக்கால் வைத்து மாட்டிக்கொள்ளவும் மாட்டோம் அதை கையாளத்தெரியாமல் சிக்கிக்கொள்ளவும் மாட்டோம்," என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.