ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உலகமெங்கும் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மணிரத்னம் பொன்னியின் செல்வன் 2. லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா, சோபிதா, விக்ரம் பிரபு, அஷ்வின், சரத் குமார், பிரபு, பார்த்திபன், லால், கிஷோர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் பொன்னியின் செல்வன் படத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு செட் மற்றும் அவருக்கு பிடித்த செட் குறித்து பேசுகையில்,

“படத்தில் வரும் புத்த விகாரம் இலங்கையில் பண்ணது ஒன்று தூத்துக்குடி அருகே அழிந்த நிலையில் இன்னும் இருக்கு.. அதோட புகைப்படங்கள் கிடைத்தது. அதை வெச்சு ஒரு வரைபடம் செய்தேன். பின் கொஞ்சம் மாத்தினேன். அந்த செட் ரொம்ப நல்லாருந்தது. அந்த செட் முழுக்க மூங்கில் கட்டகளை கொண்டு உருவாக்கினோம். அந்த சண்டைக்காக அதை சிறப்பாக உருவாக்கினோம். பின் நந்தினியின் அறை ரொம்ப பிடித்த செட். பின் சுரங்க பாதை செட் ரொம்ப அருமையான செட். சுரங்கத்தோட வழிந்தடம் பிளாஸ்டோ பாரிஸ் பொருளை வெச்சு உருவாக்குனோம். அந்த வழித்தடத்தை உருவாக்கினோம். " என்றார் தோட்டா தரணி.

மேலும் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தின் கோட்டை உருவான விதம் மற்றும் மற்ற சில கலை வடிவங்கள் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ.