தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்த வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்திருக்கும் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று ஏப்ரல் 27ஆம் தேதி தளபதி விஜயை நடிகர் விஷால் நேரில் சந்தித்தார். சர்ப்ரைஸாக நிகழ்ந்த இந்த சந்திப்பின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லத்தி. அடுத்ததாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த வெற்றி திரைப்படமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் விஷால் 34 திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து இயக்குனராகவும் களமிறங்கும் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விரைவில் இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் நேற்று ஏப்ரல் 27ஆம் தேதி வெளியானது. இந்த டீசரை காண்பிப்பதற்காகவே நேற்று தளபதி விஜயை விஷால் நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நடிகர் விஷால் தனது தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் வாயிலாக பல நற்பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கும் ஒரு வீடியோவை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி" என தளபதி விஜய் அவர்களை குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் மகிழ்ச்சியோடு உணவருந்திய முதியவர்கள் உணவளித்ததற்காக தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசி உள்ளனர். தொடர்ந்து தனது அறக்கட்டளையின் வாயிலாக நற்பணிகளை மேற்கொண்டு வரும் விஷாலின் தேவி அறக்கட்டளையின் சார்பில் தளபதி விஜய் செய்த இந்த உதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ…